நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்- அமைச்சர் உதயகுமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 


Advertisement

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எண்ணூரில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ''சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 5,600 பேர் வரை தொற்றால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்ற முதல்வரின் அறிவிப்பை, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 80 ஆண்டுகாலமாக மொழி தொடர்பான போராட்டம் நடந்து வருகிறது. 


Advertisement

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கடைபிடித்த கொள்கையைத் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கடைபிடிக்கிறார். மொழி திணிப்பைத் தான் நாங்கள் எதிக்கிறோமே தவிர, மொழி கற்றுக் கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ''நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மட்டார்கள். அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள்; நயினார் நாகேந்திரனும் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்'' என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement