இலவச சேலை : கொரோனாவை மறந்து மாஸ்க் இன்றி குவிந்த மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருத்தணியில் இலவச சேலையை வாங்குவதற்கு முகக் கவசம் இன்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மக்கள் குவிந்தனர்.


Advertisement

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த வீரகோவில் மோட்டூர் பகுதியில் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம் நரசிம்மன் கலந்துகொண்டு இலவச சேலைகளை வழங்கினார்.

image


Advertisement

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகக் கவசம் அணியாமல் இருந்தனர்.

image

அத்துடன் சமூக விலகளை கடைபிடிக்காமல் முந்திக்கொண்டு சேலைகளை பெற்று சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே இப்படி கொரோனா பரவும் வாய்ப்புக்கான சூல்நிலை ஏற்பட்டதால், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Advertisement

புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பிக்கிறார் பாரதிராஜா

loading...

Advertisement

Advertisement

Advertisement