கொரோனா பாதித்தவருக்கு உதவிய சோனு சூட்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவால், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல், இந்தியா முழுக்க ஊடரங்கு அறிவிக்கப்பட்டபோது, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து ‘ரியல் ஹீரோ’ என்று புகழப்படுகிறார், நடிகர் சோனு சூட். இந்நிலையில், ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது உட்பட தினந்தோறும் தனது சேவைகளால் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.  


Advertisement

image

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது மாமனாருக்கு உதவ உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். ”என் மாமனாருக்கு பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூவில் படுக்கை தேவை. எங்களிடம் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வருபவர்களும் இருக்கிறார்கள்.  எங்களால் அனுமதி பெற முடியவில்லை. ஐ.சி.யுவில் படுக்கை மட்டும்தான் தேவை” என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Advertisement

அதற்கு பதிலளித்த சோனுசூட் ”விரைவில் இடம் கிடக்கும். கிடைத்தவுடன் சொல்லவும்” என்று ட்விட் போட்டுள்ளார்”


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement