கமுதி : 3 கோயில்களில் 7 சிலைகள் சேதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கமுதி அருகே 100 ஆண்டுகள் பழமையான 3 கோயில்களில் இருந்த 7 சிலைகளை சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இ.நெடுங்குளத்தில் அய்யனார், அம்மன், கருப்பண்ணசாமி சிலைகள் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இவை கற்களால் அமைக்கபட்டு, கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வந்த நிலையில் அங்கிருந்த 7 சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

image


Advertisement

இது குறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் எழுவனுாரில் கிராமத்தில் உள்ள கருப்பண்ணசாமி, அய்யனார், காளியம்மன் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தபட்டு வருவதாகவும் காவல்துறையினர் பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement