சென்னை : ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மகளிடம் மர்ம நபர்கள் ஆபாச பேச்சு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரின் மகளுக்கு அடையாளம் தெரியாத நபர் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்புவதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் முக்தி முகமது சயீத்தின் மகள் ரூபா செரீஃப்பும்(55) அவரது கணவர் சவுகாத் செரீஃப்பும் கேசவபெருமாள் புரத்தில் வசித்து வருகின்றனர். இதையடுத்து ரூபா சேரீஃப் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், இரண்டு செல்போன் எண்கள் மற்றும் ஒரு லேண்ட்லைன் எண்ணிலிருந்து ஆபாசமாக பேசுவதாகவும் எஸ்எம்எஸ் அனுப்புவதாகவும் குற்ப்பிடப்பட்டுள்ளது.

image


Advertisement

இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் 294(பி)- ஆபாசமாக பேசுதல், 354(டி) என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட உள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரூபா செரீஃப் யார் என்று தெரியாமல் மர்ம நபர்கள் ஆபாசமாக பேசி உள்ளது தெரியவந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement