அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வில் ஜிம் திறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படி திறந்தால், ஜிம்முக்கு போகும்போது சில வழிமுறைகளைக் கடைபிடிப்பது அவசியம்.
சரியான நேரத்திற்குச் சென்று நமது நேரத்திற்குள் அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு திரும்புவது அவசியம். கடைசி நிமிடத்தில் ஓடாமல் சரியான நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டால் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது எளிதாக இருக்கும்.
உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்களே கொண்டு செல்ல வேண்டும். தண்ணீர் பாட்டில், மாஸ்க், டவல் போன்ற அனைத்தும் தனித்தனியாக இருக்கும்போது தொற்று பரவுவது தடுக்கப்படும்.
மறக்காமல் சானிடைசர் கொண்டு செல்லுங்கள். கையுறைகளை அணியாவிட்டால் மிகவும் சிரமம் ஆகிவிடும். ஜிம் உபகரணங்களைத் தொடும்போது சானிடைசரால் துடைத்துவிட்டு தொடவேண்டும்.
கையுறை மிகமிக அவசியம். இல்லாவிட்டால் கிருமிகளும், பாக்டீரியாக்களும் எளிதில் உடலில் நுழைந்துவிடும். ஸ்வெட்பேண்ட்ஸ் அணிந்துகொண்டால் முகத்திலிருந்து வியர்வை வழியும்போது துடைக்க எளிதாயிருக்கும்.
சிறிது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தயவுசெய்து வீட்டிலேயே இருந்துவிடுங்கள். சிறிது இருமல், காய்ச்சல், வாசனை இழப்பு ஏற்பட்டாலே மருத்துவரின் ஆலோசனையை பெறுவதே சிறந்தது.
வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்யும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மிகமிக அவசியம். ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளி விட்டே இருக்கவேண்டும்.
உடற்பயிற்சி செய்யும்போது மாஸ்க் அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் நடக்கும்போதும், ஓடும்போதும் மாஸ்க் அணிந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதோடு இதயத் துடிப்பும் வேகமாக அதிகரிக்கும். அதனால்கூட தலைச்சுற்றல், தலைவலி ஏற்படலாம்.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி