கொரோனா அச்சத்தால் ஐந்து மணிநேரம் தனி பிணமாக கிடந்த மூதாட்டி
இறுதி பயணத்திற்கும் கொரோனா பீதி.
திருத்தணியில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா அச்சத்தால், உடலை அப்புறப்படுத்த யாரும் முன் வராததால், ஐந்து மணி நேரம் வீட்டு வாசலில் தனி பிணமாக கிடந்த அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து அவரது வீட்டை நகராட்சி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடாக அறிவித்து. யாரும் வீட்டினுல் செல்ல முடியாதபடி தடுப்பு ஏற்படுத்தினர்.
வீட்டில் சுப்பிரமணியின் தாயார் சந்திரா (80) மட்டும் இருந்துள்ளார். வயதான அவருக்கு உணவு, குடிநீர் வழங்க உதவியின்றி ஐந்து நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலென்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வீட்டின் அருகே வந்த ஆம்புலென்ஸ் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டை பார்த்து மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மறுத்து சென்று விட்டனர். சிறிது நேரத்தில் மூதாட்டி இறந்துவிட்டார். நகராட்சி அலுவலர்களுக்கு புகார் செய்தும் யாரும் வராத நிலையில் பொதுமக்களும் அச்சத்தில் உடல் அருகே செல்லாததால், ஐந்து மணி நேரமாக பிணம் தனியாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து புதியதலைமுறையில் செய்தி வெளியானதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா, நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மூதாட்டி உடலை நகராட்சி பணியாளர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இறந்த மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்து பின்பு உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். கொரோனா அச்சத்தால் இறந்த மூதாட்டியின் உடல் ஐந்து மணி நேரம் தனி பிணமாக வீட்டு வாசலில் கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி