மாஸ்க் அணியாமல் ஏசி அறையில் கூட்டம் நடத்திய நகராட்சி ஆணையர் - வைரலாகும் புகைப்படம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கம்பம் நகரில் உணவகங்களை மீண்டும் திறப்பதற்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி ஆணையர் முகக் கவசம் அணியாமலும், ஏசி ரூமில் கூட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது


Advertisement

image

தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதி கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த பகுதியாக உள்ளது. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று கம்பம் நகராட்சி அலுவலகத்தில் உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையர் கமலா தலைமையில் நடைபெற்றது. இதில் உணவகங்கள் மற்றும் தேனீர் கடை உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


Advertisement

அதில் பங்கேற்ற நகராட்சி ஆணையர் கொரோனா குறித்த எந்த விழிப்புணர்வும் இன்றி முக கவசம் அணியாமல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதற்க்கெல்லாம் மேலாக இந்த கூட்டமானது குளிர்சாதன அறையில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement