வீட்டில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவேற்காடு அருகே கீழ் அயனம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ்(37). இவர் டீ கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு நாட்கள் கொரோனா முகாமில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர், மருத்துவரின் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

image


Advertisement

இந்நிலையில், அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி கோலடி மின் மயானத்தில் தகனம் செய்யவுள்ளனர்.கொரோனா தொற்று ஏற்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டு ஹரிதாஸ் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement