"கங்குலியின் கடுமையான உழைப்பே தோனி கோப்பைகளை வென்றதற்கு காரணம்"-கவுதம் காம்பீர் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சவுரவ் கங்குலியின் கடுமையான உழைப்பின் காரணமாகவே பின்னாளில் தோனி ஏராளமான கோப்பைகளை வெல்ல காரணமாக அமைந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் கணக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் காம்பீர் "தோனி தலைமயில் இந்தியா டெஸ்ட் போட்டிகளை வென்றதற்கு ஜாகீர் கானின் பந்துவீச்சே காரணம். ஜாகீர் கான் போன்றார் அணிக்கு கிடைத்தது, தோனியின் அதிர்ஷ்டம். மேலும் இதற்கு முன்னாள் கேப்டன் கங்குலியின் உழைப்பும் அதிகம். என்னை பொறுத்தவரை ஜாகீர் கான் இந்தியா உருவாக்கிய தலைச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்" என்றார்.

image


Advertisement

மேலும் தொடர்ந்த காம்பீர் "என்னைப் பொறுத்தவரை தோனி மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த கேப்டன். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வது தோனிக்கு மிகவும் எளிதாகவே இருந்தது. ஏனென்றால் அந்த அணியில் சச்சின், சேவாக், யுவராஜ், யூசஃப், கோலி ஆகிய சிறந்த வீரர்கள் கொண்ட சிறந்த அணியாக இருந்தது. ஆனால் இந்தச் சிறந்த அணியை உருவாக்க கங்குலியின் உழைப்பு அதிகமாக இருந்தது. அதன் விளைவாகவே தோனி நிறையப் போட்டிகளை வெல்ல முடிந்தது" என்றார்.

image

இதே தொலைக்காட்சிக்கு கடந்த மாதம் பேட்டியளித்த கவுதம் காம்பீர் " இந்த கிரிக்கெட் உலகம் ஒன்றைத் தவறவிட்டுவிட்டது. அது தோனி இந்தியாவுக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்காதது. அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தால், மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கியிருந்தால், கிரிக்கெட் உலகம் வேறு ஒரு தோனியை ரசித்திருக்கும். ஒரு முற்றிலும் மாறுபட்ட தோனியை நாம் கண்டு இருக்கலாம்" என்று தெரிவித்திருந்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement