நேபாளத்தில் தூர்தர்ஷனைத் தவிர பிற இந்திய சேனல்கள் முடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(செய்தி மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் யுபராஜ் காதிவாடா)


Advertisement

 

நேபாள அரசு அந்நாட்டில் செயல்பட்டு வந்த முக்கிய இந்திய சேனல்களை முடக்கியுள்ளது.


Advertisement

நேபாள அரசு பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மூன்று பகுதிகளை இணைத்து புதிய வரைப்படத்தை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து இந்திய அரசுக்கும் நேபாள அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இது மட்டுமன்றி நேபாள அரசின் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளிப்பட்டது.

image

இந்நிலையில் தற்போது நேபாள அரசு அந்நாட்டில் தூர்தர்சனை தவிர பிற அனைத்து இந்திய சேனல்களையும் முடக்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் செய்தி மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் யுபராஜ் காதிவாடா கூறும்போது “ இந்திய ஊடகங்கள் நேபாள அரசின் இறையாண்மையையும் கண்ணியத்தையும் தாக்குகின்றன. நேபாள அரசு அரசியல் மற்றும் சட்ட தீர்வுகளை நாடும்” என்று கூறினார்.


Advertisement

image

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக நேபாள அரசிடம் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement