ஜெட் வேகத்தில் உயரும் பெட்ரோல்-டீசல் விலை - கலக்கத்தில் மக்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் கடந்த 3 வாரங்களில் பெட்ரோல் விலை சுமார் 8 ரூபாய் வரையிலும், டீசல் விலை சுமார் 10 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. பொது முடக்க காலத்தில் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.


Advertisement

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. பொது முடக்கத்தால் மே மாதம் 4ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 7ஆம் தேதி முதல் தொடர்ந்து விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

image


Advertisement

கடந்த 6ஆம் தேதி வரை 75 ரூ‌‌பாய் 54 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை‌, 7 ஆம் தேதி 53 காசுகள் அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகு முதல் இரண்டு வாரங்களில் நாள்தோறும் 50 காசு வீதம் அதிகரிக்கப்பட்டு, கடந்த 20 ஆம் தேதி வரை சுமார் 7 ரூபாய் விலை உயர்வை கண்டது. அதன்பிறகு 3-வது வாரத்தில் தினமும் 30 காசுகள் வீதம் விலை உயர்த்தப்பட்டு 25ஆம் தேதி 83 ரூபாய் 18 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய் 63 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கடந்த 23 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 8 ரூபாய் 9 காசுகள் விலை உயர்வை கண்டுள்ளது.

image

பெட்ரோல் விலையையே முந்திவிடும் வேகத்தில் டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 25ஆம் தேதி வரை நாள்தோறும் 50 காசுகள் வீதம் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6ஆம் தேதி 68 ரூபாய் 22 காசுகளாக இருந்த டீசல் விலை, கடந்த 10ஆம் தேதி 70 ரூபாயை எட்டியது. கடந்த 20 ஆம் தேதி 75 ரூபாய் 29 காசாக இருந்த டீசல் விலை, 25ஆம் தேதி 77 ரூபாய் 29 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு ச‌ராசரியாக 15 காசுகள் வீதம் விலை உயர்த்தப்பட்டு, தற்போது 1 லிட்டர் டீசல் 77 ரூபாய் 72 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 23 நாட்களில் டீசல் விலை 9 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement