JUST IN

Advertisement

காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது: கனிமொழி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.


Advertisement

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

image


Advertisement

கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் உயிரிழந்ததாகச் கூறப்படும் நிலையில், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் நாளை பதவியேற்கவுள்ளார்.

இதனிடையே இது தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதல்வர் கூறினார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார். இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது"என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

image


Advertisement

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மத பாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி வருகிறார்கள்.

image

மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, இந்த வழக்கை விசாரிப்பதும், பிரேத பரிசோதனைகள் அதிகாரிகள் முன்பு பதிவு செய்யப்பட்டிருப்பதும், வழக்கு விசாரணையில் சாட்சிகளை விசாரிப்பது உட்பட அனைத்தையும் கோவில்பட்டி நீதிபதி முன்னின்று செய்திட உத்தரவிட்டிருப்பதும் மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. இந்த மரணங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கோடிக்கணக்கான வணிகர்கள் மீதான காவல்துறையின் பார்வை இதில் அடங்கியிருக்கிறது. இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்தோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

image

கரோனாவால் நாடே பாதிக்கப்பட்டு அல்லலுற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களோடு இணைந்து காவல்துறையினரும் அரும்பாடு பட்டு பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துதல், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுதல் என பல்வேறு பணிகளை உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு மக்கள் மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

"போலீஸ் படங்களை எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன்" இயக்குநர் ஹரி !

 

இந்தச் சூழ்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கமாகும். நேர்மையான விசாரணை, குற்றவாளிகளுக்கு கிடைக்கும் உரிய தண்டனை இதன் மூலம் தான் இந்தக் களங்கம் துடைக்கப்படும். எத்தனை நிதி உதவிகள் கிடைத்தாலும், ஜெயராஜ் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். ஜெயராஜ் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்திற்கு விரைவான நீதி கிடைத்திடும் வகையில் அக்குடும்பத்தினருக்கு பாஜக துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement