கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி இல்லத்தின் மீது மது பாட்டில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருப்பவர் முத்துச்சாமி. இவரது இல்லம், கோவைப்புதூர் கோகுலம் காலனி பகுதியில் உள்ளது. இந்நிலையில், மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தனது குடும்பத்துடன், வழக்கம்போல், இரவு தூங்க சென்றுள்ளார். அப்போது, இரவு 11 மணிக்கு வீட்டின் முன்பு சத்தம் கேட்டுள்ளது.
இதைக்கேட்டு வெளியே வந்து பார்க்கையில், வீட்டின் முன்பு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியின் முன்பும், பின்பும் மது பாட்டில் வீசப்பட்டு உடைந்து கிடந்துள்ளது. மேலும், வாசலின் முன்பு போடப்பட்டிருந்த கூரையின் மேலும் ஒரு மது பாட்டில் வீசப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட பொறுப்பாளர் காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல்துறையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இதுகுறித்து தகவலறிந்த திமுகவினர் மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமியின் வீட்டின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
“விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிப்பதால் நாடு வளர்ச்சி பெறும்” - இஸ்ரோ தலைவர் சிவன்
Loading More post
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!