மும்பையில் திருமணம் ஆகவில்லை என்பதற்காக மூன்று மாடி கட்டடத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற போலீஸை சக காவலர்கள் மீட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய போலீஸ் ஒருவர் நேற்று காலை 11.30 மணிக்கு தாதர் நகரில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏறி தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனைபார்த்த அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் கேட்டபாடில்லை.
இதனையடுத்து தகவலானது காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இருப்பினும் காவலர் கேட்கவில்லை. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவலர் ஒருவேளை கீழே விழுந்தால் அவரை காப்பாற்றுவதற்கு தரையில் பஞ்சு மெத்தைகளை விரித்துள்ளனர்.
இந்நிலையில் இறுதியாக தற்கொலைக்கு முயன்ற காவலரின் நெருங்கிய நண்பர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்த காவலர்கள் அவர்களை வைத்து சமாதானம் பேசி 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவரை கீழே இறக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் அதிகாரி வினோத் கூறும் போது “ அவருக்கு தனிமனித பிரச்னைகள் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்” என்று கூறினார்.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!