JUST IN

Advertisement

கொரோனா: சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரேநாளில் உயிரிழந்த அரசு மருத்துவமனை பணியாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை பணியாளர் ஒரே நாளில் உயிரிழந்தார்.


Advertisement

சென்னையைச் சேர்ந்த 56 வயதான நபர் ஒருவர் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் Toxicology துறை ஆய்வக டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். அவருக்கு திடீரென கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தென்கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை 


Advertisement

image

இதையடுத்து அவர் கடந்த 10 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அடுத்த நாளே (நேற்று) இரவு உயிரிழந்தார்.

இதனிடையே, வளசரவாக்கத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த 58 வயதான  மருத்துவர் ஒருவர் நேற்று (ஜூன் 11)  இரவு உயிரிழந்துள்ளார். கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்து இருக்கலாமென கூறப்படுகிறது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement