திருமணம் செய்வதாக கூறி துணை நடிகையை ஏமாற்றியதாக புகார் - நடிகர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சினிமா துணை நடிகையை காதலித்து கர்ப்பமாக்கியதாக, நடிகர் ஒருவரை பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (32). ‘தரிசு நிலம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், "நாடோடிகள்" படத்தில் துணை நடிகையாக நடித்த துணை நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு கடந்த 2011ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

image


Advertisement

இந்நிலையில், தியாகராஜன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் உறவு கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த துணை நடிகை புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், “என்னை காதலித்து வந்த தியாகராஜன், சென்னை தி.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த சில ஆண்டுகளாக என்னுடன் கணவன், மனைவி போல குடும்பம் நடத்தினார். திருமண ஆசைகாட்டி அடிக்கடி பாலியல் உறவு வைத்துக் கொண்டார். இதனால் நான் பல முறை கர்ப்பமடைந்து கருவை அவரது வற்புறுத்தலின் பேரில் கலைத்தேன். தற்போது என்னை திருமணம் செய்ய மறுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அது குறித்து அவரிடம் கேட்ட போது கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

image


Advertisement

அந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தியதில் அவை அனைத்தும் உண்மை என தெரியவந்தது. மேலும், தியாகராஜனுக்கு சென்னை மாநகராட்சியில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளராக வேலை கிடைத்துள்ளது. துணை நடிகை தன்னை விட ஒரு வயது மூப்பு என்பதால் தியாகரராஜன் ஒதுக்கி கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

அதனையடுத்து அவர் மீது 417 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 376(2) (n), 313 (கருவை அழித்தல்), 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனையடுத்து தியாகராஜனை போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement