இனவாதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் அவரது கருத்தை முன்வைத்துள்ளார்.
உலகிலேயே செல்வ செழிப்பு மிக்க நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர், வெள்ளை காவல் அதிகாரி ஒருவரின் காலால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு உலகம் முழுவதும் கண்டனங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் இனவாதம் குறித்த கருத்துகளையும், தங்களுக்கு நேர்ந்த இனவாத அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இனவாதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் அவரது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் முன்வைத்துள்ளார்.
Racism is not restricted to the colour of the skin.Not allowing to buy a home in a society just because u have a different faith is a part of racism too... #convenient #racism — Irfan Pathan (@IrfanPathan) June 9, 2020
அதில் கூறும் போது “ இனவாதம் தோலின் நிறத்தை வைத்து சீண்டுவதில் மட்டும் அடங்கி விடுவதில்லை. நீங்கள் வேறு விதமான நம்பிக்கை கொண்டவராக இருக்கும் பட்சத்தில், இந்தச் சமூகத்தில் ஒரு வீடு வாங்குவதற்கு கூட உங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை என்றால் அதுவும் இனவாதத்தில் ஒரு பகுதிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
My opinions are always as an indian and for India,I will not stop... — Irfan Pathan (@IrfanPathan) June 10, 2020
மற்றொரு பதிவில் “ எனது கருத்துக்களை ஒரு இந்தியராக பதிவு செய்கிறேன். அவை இந்தியாவுக்காக”. நான் நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!