"கொரோனாவை எதிர்த்துப் போராடும் டாக்டர்களை போல் ஆக வேண்டும்” - முதலிடம் பிடித்த மாணவி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவர்களைப் போல தானும் ஒரு மருத்துவராவேன் என ஹிமாச்சலப் பிரதேசத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி தெரிவித்துள்ளார்.


Advertisement

ஹிமாச்சல பிரதேசத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. 1.04 லட்சம் பேர் எழுதிய தேர்வில் தனு குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். 691 மதிப்பெண்கள் பெற்ற அவர், 98.71% தேர்ச்சி பெற்று ஹிமாச்சலப் பிரதேசத்திலேயே முதலிடம் பிடித்தார்.

image


Advertisement

இந்நிலையில் தனது எதிர்கால கனவு குறித்துக் கூறியுள்ள தனு, கொரோனாவிற்கு எதிராக தற்போது மருத்துவர்கள் அனைவரும் போராடி வரும் நிலையில், அதைக்கண்டு தானும் தனது குடும்பத்தினரும் பெருமிதம் அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அதேபோன்று தானும் ஒரு மருத்துவராக விரும்புவதாக அவர் கூறியுள்ளார். தனது அத்தையும், மாமாவும் மருத்துவர்களாக இருப்பதாகவும், கொரோனாவிற்கு எதிராக அவர்களும் போராடுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், தற்போதே நீட் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்துவிட்டதாகவும், 12ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தையும் படித்து வருவதாகவும் கூறினார். மேலும் அந்த மாணவி, நாட்டுக்காக மருத்துவ சேவை செய்வதே தனது லட்சியம் என்றார்.

“போட்டியில் இறுதியில் தான் தோனி ஆட்டமே ஆரம்பம்” - ராகுல் டிராவிட் புகழாரம்

loading...

Advertisement

Advertisement

Advertisement