உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்: 5 ஆவது இடத்தில் இந்தியா !

India-s-Covid-19-cases-cross-2-4-lakh-mark--nation-surpasses-Spain-to-become-5th-worst-hit-by-virus

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்: 5 ஆவது இடத்தில் இந்தியா !


Advertisement

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுகளின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Advertisement

image

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 9,887 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 294 நபர்கள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கையின் மூலம் இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,36,657 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 6,642 ஆகவும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 2,739 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 120 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82,968 ஆகவும் இறப்பு எண்ணிக்கையானது 2,969 ஆகவும் அதிகரித்திருக்கிறது.


Advertisement

மகாராஷ்டிராவை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 28,694 அதிகரித்துள்ளது.

image

கொரொனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்தை தொடர்ந்து இந்தியா வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement