JUST IN

Advertisement

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். 
 
Image
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,458  பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,152  ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
Image
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 633 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 251 பேர் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் 6வது முறையாக உயிரிழப்பு இரட்டை விகிதத்தில் பதிவாகியுள்ளது. 
 
Image
 
சென்னையில் மட்டும் இன்று 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement