JUST IN

Advertisement

வேலூர்: கோழி பண்ணையில் தீ விபத்து; 7000 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேலூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோழி பண்ணை எரிந்து 7000 கோழி குஞ்சுகள் உயிரிழந்தன.


Advertisement

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் (55) என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட 2 கோழி பண்ணைகளும், கோழி தீவனம் வைக்கும் அறை‌ உள்ளிட்டவையும் தீ பற்றி எரிந்தன. தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் குடியாத்தம் தீயணைப்பு துறையினர் மற்றும் கே.வி‌.குப்பம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

image


Advertisement

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தொடர்நது சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த சுமார் 7000 கோழி குஞ்சுகளும், பண்ணைகளில் உள்ள சுமார் 5 லட்சம் மதிப்பிலான இதர பொருட்களும் எரிந்து நாசமாயின. கோழிப் பண்ணையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement