‘சலாம் போடுவோம், சல்யூட் செய்வோம்’’என்ற கொரோனா விழிப்புணர்வுப் பாடலை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
சென்னை காவல் நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு, கொரோனா விழிப்புணர்வுத் தொடர்பாகப் பல வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் கொரோனா தடுப்பு பணியில் முன்கள வீரர்களாகப் பணியாற்றும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களைப் பாராட்டி “சலாம் போடுவோம் சல்யூட் செய்வோம்”என்ற பாடலை திருநாவுக்கரசு எழுதிப் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு எம்.ஆர்.ரித்தேஷ் என்பவர் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
துணை ஆணையர் திருநாவுக்கரசுவின் மனைவி லாவண்யா சோபனா, மகன் யஷ்வந்த் குமார், மகள் ஹேம மீனாட்சி மற்றும் மணிகண்டன், அஜந்தா, நித்தேஷ் உள்ளிட்டோர் இந்தப் பாடலை பாடி உள்ளனர். இந்த விழிப்புணர்வு பாடலில் நடிகர் மயில்சாமி, தொழில் அதிபர் வி.ஜி.பி.சந்தோஷம், சின்னத்திரை நடிகர் ராஜ் கமல் மற்றும் சிறுவர் சிறுமிகள் நடனம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
3 நிமிடம் ஓடக்கூடிய கொண்ட இந்த விழிப்புணர்வு பாடலை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் இன்று சென்னை காவல்துறையின் யூடியூப் தளத்தில் வெளியிட்டார். பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் ஜெயராம், அருண், பிரேம் ஆனந்த் சின்ஹா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!