உலக ஹாக்கி லீக் தொடர் அரையிறுதியின் பி பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
லண்டனில் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்டான ஹர்மன்ப்ரீத் சிங் (13 மற்றும் 33ஆவது நிமிடம்), முன்கள வீரர்களான டல்வீந்தர் சிங் (21 மற்றும் 24ஆவது நிமிடம்) மற்றும் ஆகாஷ் சிங் (47 மற்றும் 53ஆவது நிமிடம்) ஆகியோர் தலா இரண்டு கோல்களும், பிரதீப் மோர் ஒரு கோலும் அடிக்க இந்திய அணி 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. உலக ஹாக்கி லீக் தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முந்தைய லீக் போட்டிகளில் ஸ்காட்லாந்து மற்றும் கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்தது. இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை சந்திக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஹாக்கி லீக்கில் பெற்ற வெற்றி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
Loading More post
'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா!'- ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?