JUST IN

Advertisement

தமிழகத்தில் 12 இடங்களில் சதமடித்த வெயில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைத் தாண்டி பதிவாகி இருக்கிறது.


Advertisement

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது.

image


Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார்போல இன்று தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாகத் திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

image

இதற்கு அடுத்தபடியாக சென்னை மீனம்பாக்கம் 108.5 பாரன்ஹீட் , சென்னை நுங்கம்பாக்கம் 106.3, மதுரை விமான நிலையம் 106.1, வேலூர் மற்றும் கரூர் பரமத்தி 105.8, கடலூர் 104, புதுச்சேரி 102.7, தருமபுரி 101.6, சேலம் 102.5, நாமக்கல் 101.3 ஆக பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement