JUST IN

Advertisement

கடுமையான வறட்சி - 5 ஆண்டுகளாக வாழ்ந்த ஊரைவிட்டுப் புறப்பட்ட பறவைகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐந்து ஆண்டுகளாக மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த பறவைகள் வறட்சியின் காரணமாக இடம் பெயர்ந்து செல்கின்றன.


Advertisement

image


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது பெரம்பூர் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும்  இக்கிராமத்தின் சூழல் பறவைகளுக்கு ஏதுவான இடமாக இருப்பதால், இங்கு வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகமாக இருக்கும்.செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டும் வருகை தந்து கொண்டிருந்த இப்பறவைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கிராமத்திலேயே நிரந்தரமாகக் குடியேறி விட்டன.


Advertisement

image

இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், கடும் வறட்சியாலும் மக்களோடு வாழ்ந்து வந்த இப்பறவைகள் தற்போது அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். இத்தனை நாட்கள் தங்களோடு வாழ்ந்து வந்த பறவைகள் பிரிந்து செல்வதைத் தாங்க முடியாத மக்கள் வரும் காலங்களிலாவது அரசு தங்கள் ஊருக்கு ஒரு சரணாலயம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement