JUST IN

Advertisement

பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட மகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் மன உளைச்சலில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

சென்னை ராமாபுரம் தாங்கல் தெருவில் வசித்து வருபவர் உதயகுமார். இவரது மகன் யஷ்வந்த்(17). இவர் கிண்டியில் உள்ள அரசு ஐடிஐயில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கி தருமாறு கேட்டு வந்தார். ஆனால் பெற்றோர் 18 வயதுக்கு பிறகு இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது.

image


Advertisement

இன்று மாலை 4 மணிக்கு பொருளாதார திட்டங்களை அறிவிக்கிறார் நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில் நேற்று இரவும் யஷ்வந்த் வாகனம் வாங்கி தருமாறு பெற்றோரிடம் கேட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. வாங்கி தர மறுத்தவுடன் மனமுடைந்த யஷ்வந்த் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள காலி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக யஷ்வந்தை மீட்டு போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் ஏற்கெனவே யஸ்வந்த் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ராயலா நகர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement