இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆக்ரோஷ குணத்தாலே அவருக்கு பல கிரிக்கெட் வீரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் உடனான கோலியின் ஆட்டத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி மோதிய 3 டி 20 போட்டிகளில் மோதியது. அதில் முதல் டி 20 போட்டியில் கோலி ஆறு சிக்ஸர்கள், ஆறு பவுண்டரிகள் என 50 பந்துகளுக்கு 94 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் கோலி ரன்குவிப்பைத் தவிர்த்து
இன்னொரு விஷயமும் மிகவும் பிரபலமானது. அதுதான் கோலி மைதானத்தில் செய்த கெஸ்ரிக் வில்லியம்ஸின் “நோட் புக்” கொண்டாட்டம்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்தும் கோலியின் நடவடிக்கைகள் குறித்தும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
"அந்தப் போட்டி முடிந்தவுடன் நான் அவரிடம் கை குலுக்கச் சென்றேன். அப்போது அவர் நன்றாக பவுலிங் செய்தீர்கள் ஆனால் கொண்டாட்டம் ... என கிண்டலாக பேசிவிட்டு கடந்து சென்றார். அவர் அன்று நடந்து சென்ற விதம் சரியில்லை. அதே போல கடந்த ஆண்டு ஹைதாரபாத்தில் நடந்த ஒரு போட்டியில் பேட்டிங் செய்ய வந்த கோலி நேராக என்னிடம் வந்து இன்று நோட்புக் கொண்டாட்டம் இருக்க போவதில்லை என்றும் அதை நான் நடக்க விடமாட்டேன் என்ற வார்த்தை ஜாலங்களை வீசினார்.
முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நான் ஒவ்வொரு பந்தை வீசி முடித்தவுடன் கோலி என்னிடம் ஏதாவது வந்து சொல்வார். ஆனால் இது போன்ற நேரங்களிலெல்லாம் கோலியிடம் கூறியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு விளையாடு எனபதுதான் ” என்றார்.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'