விற்பனைக்கு வரும் ‘ரெட்மி 9 நோட் ப்ரோ மேக்ஸ்’ : விலை, சிறப்பம்சங்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எம்.ஐ நிறுவனத்தின் ‘ரெட்மி 9 நோட் ப்ரோ மேக்ஸ்’ ஸ்மார்ட்போன் நாளை மறுநாள் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.


Advertisement

இந்தியாவில் பொது முடக்கத்திற்குப் பின்பு மொபைல் போன்களின் விற்பனை தொடங்கியுள்ளதால் அனைத்து நிறுவனங்களும் பல்வேறு புதிய மாடல்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் எம்.ஐ நிறுவனம், ‘ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்’ மாடல் ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த போனின் விலை அதன் மெமரிக்கு ஏற்றாற்போல இந்திய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

image


Advertisement

அதன்படி, 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ரகத்தின் விலை ரூ. 16,499 ஆகும். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.17,999 எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் 19,999 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த போன் நீலம், வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் கிடைக்கும்.

image

.67 இன்ச் அளவு ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும். இதில் கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ சிப் பொருத்திக்கொள்ள முடியும். இதன் பின்புறத்தில் 64 எம்பி மெயின் கேமராவும், 5 எம்பி மற்றும் 2 எம்பி என இரண்டு லென்சுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 32 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. 5,020 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.


Advertisement

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா : மாவட்ட வரியாகப் பட்டியல் விவரம்

loading...

Advertisement

Advertisement

Advertisement