ஷிகர்தவான் பதிவிட்ட புகைப்படத்திற்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.நாளின் பெரும் பகுதி வீட்டிலேயே கழிவதால் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது நடவடிக்கைகள் குறித்தும், பிற விஷயங்கள் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.
இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனது இரு கைகளிலும் தம்புல்களை வைத்துக்கொண்டு இருக்க, ஷிகர் தவான் அந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார். தவான் புகைப்படத்தைப் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இந்தப் புகைப்படத்திற்குப் பதிலளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளது. அதில் தவான் பதிவிட்ட புகைப்படத்தை இணைத்து “என்ன ஒரு அரிதான புகைப்படம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?