JUST IN

Advertisement

பேருந்துகள் இயக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.? விவரம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்டமிடும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக 8 போக்குவரத்து கழகத்திற்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன் அரசுப் பேருந்துகள் இயங்க வேண்டும். ஒட்டுனர், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி வழங்கப்படும். பேருந்து இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பயணிகள் இருக்கையில் அமர மார்க் செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் 6 அடி இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும்.


Advertisement

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படக் கூடாது. வரிசையில் நின்று பேருந்துகளில் ஏற வேண்டும். அதேபோல் E- pay, Google pay போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்

பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்டமிடும்போது இதுபோன்ற நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement