கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவத்துறை மற்ற அனைவரையும் தவிர ஒருபடி முன்னால் நிற்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கொரோனாவுக்கு எதிராக உழைத்து வருகிறார்கள். தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவுக்கு எதிராக போராடி பணி செய்த செவிலியருக்கு அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் வாசிகள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிராவின் ராதிகா விஞ்சுர்கர் என்ற செவிவியர் நாக்பூரில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு பிறகு வீடு திரும்பிய அவரை அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் வாசிகள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். செவிலியருக்கு ஆரத்தி எடுத்தும், கைத்தட்டியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பை கொஞ்சமும் எதிர்பாராத செவிலியர், உணர்ச்சிமிகுதியில் கண் கலங்கினார்.
சில தினங்களுக்கு முன்பு, 20 நாட்களுக்கு மேலாக இடைவிடாமல் மருத்துவமனையில் பணி செய்துவிட்டு வீடு திரும்பிய ஒரு பெண் மருத்துவரை அவரது குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் சுற்றி நின்று மலர் தூவி வரவேற்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஆகஸ்ட்டுக்குள் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம்: அதிர்ச்சி தகவல் !
Loading More post
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?