சென்னை: மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மை பணியாளருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அயனாவரம் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

நேற்று மட்டும் தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 43 பேர். தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அயனாவரம் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு (50) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

image


Advertisement

புளியந்தோப்பைச் சேர்ந்த இவர் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனை வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மருத்துவமனை வந்த இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் தூய்மை பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

image

மேலும் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவருக்கு அறிகுறி இருப்பதாகவும், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செவிலியரின் கணவர் வேறொரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில் அவருடைய மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Advertisement

டெல்லியில் 15 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement