ஊரடங்கை மீறி சாலைக்கு வந்து டிக் டாக்: தேடிச் சென்று கைது செய்த போலீசார்!

2-men-step-out-amid-lockdown-and-make-TikTok-video-demeaning-police--both-held

ஊரடங்கை மீறி சாலையில் வந்து டிக்டாக் வீடியோ செய்த இருவரை போலீசார் தேடிச் சென்று கைது செய்துள்ளனர்.


Advertisement

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவை சமாளிக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதனை மீறி தேவையில்லாமல் சாலையில் நடமாடுபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில் ஊரடங்கை மீறி சாலையில் வந்து டிக் டாக் வீடியோ செய்த இருவரை போலீசார் தேடிச் சென்று கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 24 மற்றும் 19 வயதான இரு இளைஞர்கள் ஊரடங்கை மதிக்காமல் சாலைக்கு வந்து டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர்.

image

டிக் டாக் வீடியோவிலேயே போலீசாருக்கு சவாலும் விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோவை வைத்து தகவல்களை திரட்டிய போலீசார் அவர்கள் இருவரையும் தேடிச் சென்று கைது செய்தனர். மக்களின் நலனுக்காகவே ஊரடங்கு அமலில் உள்ளதாகவும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Advertisement

ஏசி பயன்படுத்தினால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமா...?

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement