மதுரையில் இருந்து டெல்லி, வெளிநாடு சென்றவர்கள்: வெளியானது கொரோனா பரிசோதனை முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி மாநாடு மற்றும் வெளிநாடு சென்று வந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்


Advertisement

மதுரை மாவட்டம் மேலூர், மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் டெல்லி மாநாடு மற்றும் வெளிநாடு சென்று வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்காக கடந்த 1ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

image


Advertisement

மேலூர் பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேர் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

image

இந்நிலையில் மீதமுள்ளவர்களும் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 3 பேர் மற்றும் வெளிநாட்டிற்கு சென்று வந்த ஒருவர் ஆகிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்


Advertisement

 திருவாரூரில் மருத்துவர்கள் போல் பேசி சமூக வலைதளங்களில் வதந்தி: யார் அவர்கள்?

 

loading...

Advertisement

Advertisement

Advertisement