"சின்ன தல" சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம் நிதியுதவி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தடுப்பு பணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.


Advertisement

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் "கொரோனாவுக்கு எதிராக நாம் ஒன்றினைந்து போராட வேண்டிய நேரமிது. இதில் என்னுடைய பங்களிப்பாக ரூ.51 லட்சம் தருகிறேன். இதில் ரூ.31 லட்சம் பிரதமர் நிவாரணநிதிக்கும், ரூ.21 லட்சம் உத்தரப் பிரசேத மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் கொடுக்கிறேன். நீங்களும் உங்களால் முயன்றதை கொடுங்கள். ஜெய் ஹிந்த்." என தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா தடுப்பு பணி: பிசிசிஐ ரூ.51 கோடி நிதி ! 

image

மத்திய அரசுக்கு டாடா குழுமம் ரூ.1,500 கோடி நிதியுதவி 


Advertisement

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை தருமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். பேரிடர்களின்போது மக்களைக் காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க நீண்ட கால அடிப்படையில் தங்களின் நிதியுதவி உதவும் என்றும் இதற்காக அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடி, டாடா குழுமம் ரூ.1500 கோடி, பிசிசிஐ அமைப்பு ரூ.51 கோடியும் நிதியுதவி அளித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement