JUST IN

Advertisement

நியூயார்க்கில் புல்லட் ரயில் வேகத்தில் பரவும் கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூயார்க்கில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக 210 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

image

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரூ, தாங்கள் எதிர்பார்த்ததைவிட நோய் பாதிப்பு, அதிகமாகவும், வேகமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அரசு போதுமான உயிர்காக்கும் உபகரணங்களை எந்தபகுதிக்கும் அனுப்பவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்படும் பகுதியாக அமெரிக்கா மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா : அமைச்சர் விஜயபாஸ்கர் 

image

ஒரு மாதத்தில் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகமாகி உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,989ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

கொரோனா கொடூரத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்; ஐபிஎல் நிலை என்ன? 

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ,915 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 8,114 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் வைரஸ் தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement