21 நாட்கள் ஊரடங்கை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற பணிகள் அனைத்தையும் நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது
நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார்.
நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் நீதிமன்ற பணிகள் அனைத்தையும் நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள நிர்வாகக்குழு, அதிமுக்கியத்துவம் வாய்ந்த அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நீதிபதி அனுமதி பெற்று தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின் அந்த வழக்கின் விசாரணை நடைபெறும் இடம், நேரடி விசாரணையா அல்லது காணொளி காட்சி மூலம் விசாரணையா என மனுதாரர் மற்றும் வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்படும்.
நிர்வாக அல்லது நீதிமன்ற அலுவல் தொடர்பாக சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் மிக அவசர வழக்காக இருந்தால் மட்டுமே அந்ததந்த மாவட்ட முதன்மை நீதிபதியின் அனுமதியோடு வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது
தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடு - தமிழக அரசு
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?