கொரோனா வைரஸ்: இந்தியாவில் 370 பேர் பாதிப்பு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்ப்பட்டவரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் காலை வரை கொரோனா வைரஸால் 341 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகலில் இந்த எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை 5 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார்.


Advertisement

கொரோனா அச்சத்தை மீறி சுடுகாட்டில் அகோரிகளுடன் பூஜை நடத்திய அரசியல் பிரமுகர் ..! 

image

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது நபர் கொரோனா வைரஸால் மரணம் அடைந்திருக்கிறார். கொல்கத்தாவிலிருந்து வந்த அந்த நபர் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

“அறிவியலின் பணிக்காக காத்திருக்கிறோம்”: பினராயி விஜயன் 

இந்தியாவில் இதுவரை முதியவர்கள் மட்டுமே கொரோனா வைரஸால் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது நடுத்தர வயதுடைய ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் இந்தியாவில் கொரோனா வைரஸால் உறுதிசெய்யப்படும் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 63 வயது முதியவர் 5வது நபராக இந்தியாவில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement