TopNews | அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு... தீவிரமடையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமானவை. மாநில முதலமைச்சர்களுடன் கானொலி மூலம் நடத்திய கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் முடியும் வரை தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை. திருப்பூர் போராட்டம் தொடர்பான வழக்கு மீதான விசாரணையின் போது உயர் நீதிமன்றம் உத்தரவு

image


Advertisement

கொரோனாவில் இருந்து தப்ப புகைப்பிடிப்பது, மதுஅருந்துவதை தவிருங்கள். உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

தமிழகத்தை அண்டை மாநிலங்களுடன் இணைக்கும் சாலைகள் மூடல். அத்தியாவசியப் பொருட்களுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அறிவிப்பு.

சுய ஊரடங்கின் போது தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக வெளியே செல்லவேண்டாம் என வேண்டுகோள்


Advertisement

image

சுய ஊரடங்கை ஒட்டி இன்றிரவு 12 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை பயணிகள் ரயில்கள் இயங்காது. புற நகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, கோவையில் கூடுதல் மையம் திறக்கப்படுகிறது

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு வெளிநாட்டினர் உட்பட 5ஆக உயர்வு. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 236ஆக அதிகரிப்பு

image

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு. படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி.

loading...

Advertisement

Advertisement

Advertisement