JUST IN

Advertisement

மகள் வயது பெண்ணை திருமணம் செய்த நபர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகள் வயது பெண்ணை திருமணம் செய்தவரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகரை சேர்ந்தவர் கண்ணன்(48) இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு 19 வயது மற்றும் 12 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். கண்ணன் கட்டடத் தொழில் செய்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டட பணியின் போது யுவராணி(45) என்ற பெண்ணுடன் சென்றுவிட்டார்.

image


Advertisement

இந்நிலையில், யுவராணியின் மகள் கல்பனா(19) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு செங்கல்பட்டில் கண்ணன் வசித்து வருவது மஞ்சுளாவுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் கேட்ட போது மனைவி மற்றும் மகள்களை கொன்று விடுவதாக கண்ணன் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் காரணமாக மஞ்சுளா 10 க்கும் மேற்பட்ட மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் உறவினர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கண்ணனின் மகள் ஜீவா(19) கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் கண்ணன் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாச பேசுவது, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement