JUST IN

Advertisement

கொரோனாவால் உயிரிழந்த பெண் மருத்துவர்... மருத்துவனைகளில் போதிய வசதிகள் இல்லை எனப் புகார்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஈரானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் மருத்தவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


Advertisement

ஈரானில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

ஈரானில் உள்ள ஷோஹாடா மருத்துவமனையில் மருத்துவப் பணி ஆற்றி வந்தவர் ஷிரின் ரூஹானி ராட். இவர் அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதைத்தொடர்ந்து இவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டே நோயாளிகளுக்கும் சிகிச்சை பார்த்து வந்தார். ஆனால் நேற்று முன் தினம் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவர் ரூஹானி, தெஹ்ரானில் உள்ள மாசி தானேஷ்வரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

image

ஈரானில் உள்ள செவிலியர்களின் இறப்பு புள்ளி விவரங்கள் குறித்து, செவிலியர் இல்லத்தின் பொதுச் செயலாளர் முகமது ஷெரிபி மொகதாம் அளித்த பேட்டியில் “கொரோனா வைரஸின் இறப்பு விகிதம் நாட்டின் சுகாதார அதிகாரிகளின் பற்றாக்குறையை காட்டுகிறது. அத்துடன் செவிலியர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பிற உபகரணங்கள் பற்றாக்குறை முதல் நர்சிங் ஊழியர்களின் பற்றாக்குறை வரை மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால் அதிகளவில் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளை பராமரிக்க செவிலியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Image result for Dr. Shirin Rouhani Rad dies

ம.பி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்..!

தெஹ்ரானில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்களின் தலைவர் அலிரேஸா ஜாலி இதுகுறித்து கூறுகையில், “எங்கள் மருத்துவமனைகள் குறித்த சரியான படம் அதிகாரிகளிடம் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையையும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களையும் பார்த்தால் மட்டுமே அவர்கள் நெருக்கடியின் ஆழத்தை உணருவார்கள்” எனத் தெரிவிக்கிறார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement