கொரோனா விழிப்புணர்வுக்காக கேரள போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது
கொரோனா தொற்று கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பிரதான அறிவுரையாக உள்ளது. அதேபோல் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தும் கிருமிநாசினியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு முகக்கவசங்கள் அணிவதைக் காட்டிலும் கைகளை கழுவுவது தான் மிகச்சரியான தடுப்பு முறை என தெரிவித்துள்ளது.
கண்ணுக்கு தெரியாமல் கொரோனா கிருமி படர்ந்திருக்கும் பொருட்களை நாம் தொடுவது நிகழக்கூடும் என்பதால்தான், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 23 முறை நாம் நமது முகங்களை கைகளால் தொடுகிறோம் என்கிறது ஆய்வு. இதனால் கொரோனா தடுப்பு குறித்த முக்கிய விழிப்புணர்வாக கைகளை கழுவுவது உள்ளது.
எங்கள் முயற்சி வீணாகிவிடக்கூடாது: கொரோனாவை எதிர்த்து போராடும் செவிலியரின் உருக்கமான பதிவு
இந்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக கேரள போலீசார் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடன அசைவுகளுடன் கைகள் கழுவும் முறை குறித்து விளக்கும் அந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Loading More post
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி