“கொரோனா எதிரொலியால் காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும்” - உச்சநீதிமன்ற நீதிபதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் பரவும் இடமாக நீதிமன்றங்கள் ஆகிவிடக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.


Advertisement

நீதிமன்றத்தில் அலுவல்கள் தொடங்கியவுடன் கொரோனா குறித்து கருத்து தெரிவித்த அவர், இணையதளம் மூலம் மனுக்களை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இது தொடர்பாக அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.image

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் சூழலில், நீதிமன்றங்களுக்கு மனுதாரர்கள் வருவதை தவிர்க்கும் நோக்கில் காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்கும் வசதி உச்சநீதிமன்றத்தில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என சந்தி‌ரசூட் தெரிவித்தார். இதற்கிடையே, கொரோனா வைரஸை எதிர்கொள்ள உச்சநீதிமன்றம் தயார்படுத்திக்கொள்ளவில்லை என நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


Advertisement

image

நீதிமன்ற அறைகள் மற்றும் வாயில்கள் குறுகலாக இருப்பதால் ‌‌மருத்துவ உப‌கரணங்களைக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது சிக்கலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘கொரோனா போர் - பொறுப்பான குடிமக்களே அரசின் பலம்’ - பிரதமர் மோடி

loading...

Advertisement

Advertisement

Advertisement