JUST IN

Advertisement

வாரத்தின் முதல் நாள் இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாரத்தின் முதல் நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தக‌மாகின.


Advertisement

image

மதியம் 1 மணியளவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2713 புள்ளிகள் குறைந்து 31,390 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 756 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,199 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில் பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, டி.எல்.எஃப் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.


Advertisement

கொரோனா அச்சத்தால் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி: வர்த்தகம் நிறுத்தம் 

image

நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில், மற்ற வங்கிகள் சுமார் 10 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அவ்வங்கிப் பங்குகள் 50 சதவிகிதம்‌ உயர்ந்து வர்த்தக‌மாகியது.‌ இதற்கிடையில் அந்நியச் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42 காசு சரிந்து 74 ரூ‌பாய் 17 காசானது.


Advertisement

image

கொரோனா அச்சுறுத்தலால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த 15 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் சுமார் 9 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அதிகளவாக சென்செக்ஸ் 41 ஆயிரத்து 399 புள்ளிகளாக வர்த்தகமாகியது.

image

சென்செக்ஸ் 3000 புள்ளிகள் சரிவு : ஊசலாடும் இந்திய பங்கு சந்தைகள் 

அடுத்து வந்த நாட்களில் சரிவைச் சந்தித்து வந்த சென்செக்ஸ் மார்ச் 2ஆம் தேதி 38 ஆயிரத்து 144 புள்ளிகளிலும், மார்ச் 9ஆம் தேதி 35 ஆயிரத்து 634 புள்ளிகளாகவும் குறைந்தது. ‌மார்ச் 13ஆம் தேதி சென்செக்ஸ் இந்த ஆண்டில் குறைந்தபட்ச அளவாக 29 ஆயிரத்து 388 புள்ளிகளாக கீழிறங்கி, அன்றைய தினமே சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் மீண்டெழுந்தது. இந்நிலையில், இன்று காலை சென்செக்ஸ் சுமார் ஆயிரத்து 500 புள்ளிகள் சரிந்து 31 ஆயிரத்து 929 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement