JUST IN

Advertisement

படத்தின் பெயரில் ’கொரோனா’ வேண்டும் - போட்டிப்போட்டு பதிவு செய்யும் சினிமாத்துறை!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகத்தையே அச்சுறுத்தும் பெயராகிவிட்டது கொரோனா. கொரோனா என்ற பெயர்தான் உலகநாடுகள் பலவற்றில் எதிரொலிக்கின்றன. மக்களை வீட்டுக்குள் முடக்கிவிட்டது இந்த கொரோனா வைரஸ். இயல்பு வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது இந்த கொடூர வைரஸ். சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற பெயர் இன்று பட்டித்தொட்டி எங்கும் கேட்கிறது.


Advertisement

image

இந்த கொரோனா என்ற பெயர் மீது தற்போது சினிமாத்துறையினர் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். கொரோனா என்ற வார்த்தை அடங்குமாறு படத்தின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


Advertisement

இந்தியில் கொரோனா பியார் ஹை என்ற பெயர் கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளியான இந்த தகவலை, தயாரிப்பாளர் கிரிஷ்கிகா லுல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

image

இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஸ்கிரிப்ட் பணி தற்போது போய்க்கொண்டு இருக்கிறது.விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார். இதேபோல் டெட்லி கொரோனா என்ற பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொடர்புடைய பல பெயர்களைப் பதிவு செய்ய சினிமாத்துறையினர் ஆர்வம் காட்டுவதாக திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement