“ரஸல் முதல் பாண்ட்யா வரை” ஐபிஎல் தொடரில் மிரட்ட காத்திருக்கும் ஆல்ரவுண்டர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் டி20 தொடர்கள் மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டாலும், ரசிகர்களிடையே ஐபிஎல் ஜூரம் இன்னும் குறைந்தபாடில்லை. முன்பைவிட இப்போது ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் டி20 தொடரில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தும். ஒவ்வொரு அணியிலும் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுவார்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை அது டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் எதுவாயினும் அந்த அணியின் ஆல் ரவுண்டர்களின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.


Advertisement

இந்த 13 ஆவது ஐபிஎல் தொடரில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள் யார் அவர்களின் முந்தைய சாதனைகளை என்ன என்பதை சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.

image


Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் - பென் ஸ்டோக்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை நட்சத்திர ஆல் ரவுண்டராக இருப்பவர் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். ஸ்டோக்ஸ் தவிர ராஜஸ்தான் ராயல்ஸில் ரியான் பகாரியா ஆகியோர் இருக்கின்றனர். உலகக் கோப்பை போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு பக்க பலமாக இருந்தார். அதனால் இந்தாண்டு பென் ஸ்டோக்ஸ் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

image


Advertisement

டெல்லி கேபிடல்ஸ் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணி இம்முறை ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸை ரூ.4.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அதனால், அவரையே பெரிதும் நம்பி இருக்கிறது. அந்த அணியில் கிறிஸ் வோக்ஸ் இருந்தாலும், காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரை தவிர டெல்லி அணியில் இந்திய வீரர் அக்ஸர் பட்டேல் இருக்கிறார். ஆனால், இம்முறை அதிரடியாக பேட்டிங்கும், மிதவேகமாக பந்துவீசும் மார்கஸ் ஸ்டொய்னிஸின் சிறப்பான ஆட்டத்துக்காக காத்திருக்கிறார்கள் தலைநகர் ரசிகர்கள்.

போட்டிகளைக் குறைத்து ஐபிஎல் தொடரை நடத்தத் திட்டமா? 

image

சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி - விஜய் சங்கர்

சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி ஆல்ரவுண்டரான விஜய் சங்கரை தங்களது துருப்புச் சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த அணியில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி, வெஸ்ட் இண்டீஸின் ஃபேபியன் ஆலன் இருந்தாலும் விஜய் சங்கரைதான் தங்களது முதல் சாய்ஸாக வைத்திருக்கிறது. ஏனென்றால், கடந்த காலங்களில் விஜய் சங்கர் வெளிப்படுத்திய ஆட்டத்திறன் அப்படிப்பட்டது. எனவே, இந்தாண்டு வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களை நம்பாமல் நம்மூர் விஜய் சங்கரை களமிறக்கி அசத்த காத்திருக்கிறது ஐதராபாத்.

image

சென்னை சூப்பர் கிங்ஸ் - ரவீந்திர ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இங்கிலாந்தின் சாம் குரனை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. சாம் குரனை ரூ 5.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவரை தவிர ரவீந்திர ஜடேஜா அணியில் எப்போதும் இருப்பார் அதில் சந்தேகமில்லை. ஆனால், இளம் வீரரான சாம் குரனையும் ஒரு சேர ஆடும் லெவனில் இணைத்து சிஎஸ்கே அணி கெத்துக் காட்ட திட்டமிருக்கிறது. மேலும், நியூசிலாந்தின் ஆல்ரவுண்டர் மிட்சல் சாண்ட்னரும் அணியில் இருப்பதால் சிஎஸ்கே சிங்கங்களுக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

image

பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் - கிறிஸ் மோரிஸ்

பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணி தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளது கிறிஸ் மோரிஸின் கூடுதல் பலமாக பெங்களூர் அணி பார்க்கிறது. மேலும் ஆல்ரவுண்டர்கள் நிரம்ப இருக்கும் அணியாக இருக்கிறது பெங்களூர். மொயீன் அலி, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகியோரும் இருக்கின்றனர். இவர்களில் கிறிஸ் மோரிஸும், வாஷிங்டன் சுந்தரும் அணியில் நிரந்தரமான இடத்தை பிடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

“வவ்வால், பூனையெல்லாமா சாப்பிடுறது.. ஒரு வரைமுறை இல்லையா” சீனா மீது அக்தர் கொந்தளிப்பு 

image

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஜேம்ஸ் நீஷம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பொறுத்தவரை நியூசிலாந்தின் ஜேம்ஸ் நீஷம் முக்கிய ஆல் ரவுண்டர். இந்தாண்டு கேப்டன் பதவி கே.எல்.ராகுலுக்கு சென்றுள்ளதால், அந்த அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை ரூ 10.75 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தாலும், சர்வதேச போட்டிகளில் சில காலம் மேக்ஸ்வெல் விளையாடாமல் இருக்கிறார். அதனால் பஞ்சாப் அணியின் முதல் சாய்ஸாக நீஷம் மட்டுமே இருக்கிறார். ஒருவேளை ஆடும் லெவனில் இருவருக்கும் இடம் கிடைத்தால் பஞ்சாப் சிங்குகள் ஆட்டம் தாருமாராக இருக்கும்.

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஆண்ட்ரூ ரஸல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எப்போதும் ஒரே ஆபத்பாந்தவனாக இருக்கும் ஆல் ரவுண்டர் வெஸ்ட் இண்டீஸின் ஆண்ட்ரூ ரஸல். கடந்த காலங்களில் தனி ஒருவனாக இருந்து கொல்கத்தா அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். எனவே, எப்போதும் கொல்கத்தாவின் முதல் சாய்ஸ் ரஸல் மட்டுமே. இவரை தவிர சுனில் நரேன் ஆல்ரவுண்டராக கருதப்படுகிறார். ஆனாலும் கொல்கத்தா அணிக்கு மிகவும் நெருக்கமான ராசிக்காரராக இருப்பவர் ரஸல் மட்டுமே.

image

மும்பை இந்தியன்ஸ் - பொல்லார்டு

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யாதான் முதல் சாய்ஸ். அதன் பின்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு. இவர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல வெற்றிகளை கைமேல் கொடுத்து இருக்கிறார்கள். இப்போது காயத்தில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டெழுந்து அணிக்கு திரும்பியிருக்கிறார் பாண்ட்யா. இப்போது நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் அதே பழைய அதிரடியை தொடர்ந்து அணிக்கு வெற்றியும் கோப்பையும் மீண்டும் தருவார்கள் என மும்பை ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement