JUST IN

Advertisement

"நானும் கொரோனா பரிசோதனை செய்ய இருக்கிறேன்" ட்ரம்ப் தகவல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தான் விரைவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.


Advertisement

image

ட்ரம்பை சந்தித்த பிரேசில் அதிகாரி ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இந்நிலையில், உடல் பரிசோதனை நடத்தப்படுமா என செய்தியாளர்கள்‌ ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தன்னிடம் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனினும் விரைவில் தனக்கு பரிசோதனை நடத்தப்படும் என ட்ரம்ப் பதில் அளித்தார்.


Advertisement

‘கொரோனா சோதனைக்கு பயந்து தப்பியோட்டம்’.. கொச்சியில் பிடிப்பட்ட அமெரிக்க தம்பதி..! 

image

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் தேசிய அவசரநிலையை அறிவித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 700-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரில் உள்ள ரோஸ் கார்டனில் செய்தியாளர்களுடன் பேசிய ட்ரம்ப், அவசர நிலை அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அப்போது, கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகவும் அதிபர் அறிவித்தார்.


Advertisement

image

கொரோனா அச்சம்: பத்ம விருதுகள் விழா ஒத்திவைப்பு ! 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஐ.நா. ஊழியர்கள் அனைவரும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலான பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பணியாற்றுபவர்கள் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை , அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement