ஐபிஎல் தொடருக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மேற்கொண்ட பயிற்சி இன்றுடன் நிறைவுப்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், நாளை முதல் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் முன்னதாக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுவதாக இருந்தது. இதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மார்ச் 1 ஆம் தேதி சென்னை வந்தார்.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றம் ?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 2 ஆம் தேதி முதல் தனது பயிற்சியைத் தொடங்கினார். தோனியுடன் இணைந்து முரளி விஜய், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அம்பத்தி ராயுடு. சுரேஷ் ரெய்னா ஆகியோரும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். சிஎஸ்கே அணியின் பயிற்சியை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர். சிஎஸ்கே அணியின் பயிற்சி புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணை முதல்வர் தகவல்
இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதால் சிஎஸ்கே அணியினரும் இன்றுடன் பயிற்சிகளை முடித்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் நாளை முதல் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?