JUST IN

Advertisement

எம்.பி சீட்: ஜி.கே.வாசனுக்கு அடித்த ஜாக்பாட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாநிலங்களவை எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.


Advertisement

மாநிலங்களவை எம்.பி-க்களாக உள்ள முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், திருச்சி சிவா, ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யநாத் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் தலா மூன்று எம்.பி-க்களை பிரித்துக்கொள்ள முடியும்.

Image result for தம்பிதுரை முனுசாமி


Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை.. இந்திய அணியின் சறுக்கல் ஆரம்பித்த புள்ளி இதுதான்..!

இதைத்தொடர்ந்து திமுக சார்பில் களமிறங்க போகும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதாவது, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Image result for ஜிகே வாசன் திமுக


Advertisement

பொன்னேரியில் வாலிபால் ஆடும்போது தகராறு: 2 பேர் கல்லால் அடித்துக் கொலை

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதாவது, அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கே.பி முனுசாமி அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement